‘புராஜெக்ட் கே’ அப்டேட் - பிரபாஸின் முதல் தோற்றம் வெளியீடு

‘புராஜெக்ட் கே’ அப்டேட் - பிரபாஸின் முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது. இந்த நிலையில் இன்று (ஜூலை 19) பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் புராஜக்ட் கே என்றால் என்ன என்பது குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகளை அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்வில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21ஆம் தேதி இந்தியாவிலும் இந்த க்ளிம்ப்ஸ் வெளியாக உள்ளது குறிப்பிடத்தககது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in