சுதீப் | கோப்புப்படம்
சுதீப் | கோப்புப்படம்

உண்மை ஒரு நாள் வெளிவரும்: சுதீப்

Published on

நடிகர் சுதீப் மீது, கன்னடத் தயாரிப்பாளர் எம்.என்.குமார், ‘தன்னிடம் ரூ.9 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு, கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார்’ என்று புகார் கூறியிருந்தார். இதை மறுத்த நடிகர் சுதீப், ரூ.10 கோடி கேட்டு எம்.என்.குமார் மீது, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இதற்காக நீதிமன்றத்துக்கு வந்த சுதீப் கூறும்போது, “நான் தவறு செய்திருந்தால் இவ்வளவு நாள் இந்தத் துறையில் நீடித்திருக்க முடியாது. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதிமன்றம் அதை முடிவு செய்யட்டும். நான் முழு பிரச்சினையையும் பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in