பவன் கல்யாண்  - த்ரிவிக்ரம் படத்தின்  பெயர் அஞ்ஞாதவாசி

பவன் கல்யாண்  - த்ரிவிக்ரம் படத்தின்  பெயர் அஞ்ஞாதவாசி

Published on

பவன் கல்யாண் நடிப்பில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்துக்கு 'அஞ்ஞாதவாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'ஜல்சா', 'அத்தாரிண்டிகி தாரேதி' ஆகிய ப்ளாக்பஸ்டர் படங்களில் பவன் கல்யாண் நடித்துள்ளார். இந்த இணையின் மூன்றாவது படத்தின் தலைப்பு இறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது 'அஞ்ஞாதவாசி' என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில், பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், 1 வருடம் தங்களது அடையாளம் யாருக்கும் தெரியாவண்ணம் வாழும் அஞ்ஞாதவாசமும் மேற்கொண்டனர். அப்படி வாழும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய கதை இது என்று கூறப்படுகிறது. பவன் கல்யாண் ஐடியில் வேலை செய்யும் ஒருவராக இதில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் அனிருத் முதல்முறையாக தெலுங்கில் நேரடியாக இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், குஷ்பு, 'மிருகம்' ஆதி, உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in