மீண்டும் இணைகிறது மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி

மீண்டும் இணைகிறது மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி
Updated on
1 min read

கொச்சி: ‘த்ரிஷ்யம்’, ‘12த் மேன்’ படங்களைத் தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் புதிய படம் ஒன்றை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்திருந்தார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படமும் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்துக்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இதற்கான படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மோகன்லால் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in