

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பென்னா படங்களில் நடித்த அவர் இப்போது தெலுங்கில் மீண்டும் நடிக்கிறார்.
‘உப்பெனா’ இயக்குநர் புச்சி பாபு சனா அடுத்து ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இது ராம்சரணின் 16 வது படம். விளையாட்டை மையப்படுத்திய கதையான இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால், வில்லன் வேடமில்லை என்றும் அவருக்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.