நடிகை நிஹாரிகா விவாகரத்து

நடிகை நிஹாரிகா விவாகரத்து
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு. இவர் தமிழில் 'விழித்திரு' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் மகள் நிஹாரிகா. நடிகையான இவர், தமிழில், விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு 2020-ம் வருடம் குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யாவுடன் திருமணம் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார் நிஹாரிகா. இதனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் செய்திகள் பரவின. இந்நிலையில், ஹைதராபாத் அருகிலுள்ள குக்கட்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் நிஹாரிகா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள அவர், “சைதன்யாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஆதரவளித்து உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in