ராஜமவுலியின் அடுத்தபடம்: விஜயேந்திர பிரசாத் புது தகவல்

ராஜமவுலியின் அடுத்தபடம்: விஜயேந்திர பிரசாத் புது தகவல்
Updated on
1 min read

ஹைதராபாத்: மாபெரும் வெற்றிபெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மகேஷ்பாபுவின் பிறந்த நாளையொட்டி ஆக. 9-ம் தேதி இதன் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும். வழக்கம்போலவே ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கும் கதை எழுதுகிறார். இதன் கதை எப்படியிருக்கும் என்று அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘இண்டியானா ஜோன்ஸ்’ படங்களில் ஒன்றான ‘ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்’ (Raiders of the Lost Ark) படம் போன்று இது இருக்கும். த்ரில்லுடன் எமோஷனும் கலந்திருக்கும். ஜூலை மாதத்துக்குள் கதையை எழுதி முடிக்க வேண்டும். கிளைமாக்ஸ் ஒரே படத்துடன் முடிவது போல இருக்காது. தொடர்ச்சிக்கான வழியுடன் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

‘ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்’, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி 1981-ம்ஆண்டு வெளியான ஆக் ஷன் அட்வெஞ்சர் படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in