

பரிதாபாத்: அஜித்தின் ‘வேதாளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கபீர் துஹான் சிங். பின்னர் ‘றெக்க’, ‘காஞ்சனா 3’, ‘அருவம்’, ‘ஆக்ஷன்’ உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹரியானாவைச் சேர்ந்த ஆசிரியையான சீமா சாஹல் என்பவரைக் காதலித்து வந்தார்.
இவர்கள் திருமணம் சமீபத்தில் பரிதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டனர். அவர்களுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி கபீர் துஹான் சிங் கூறும்போது, “என் வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன். கடவுளும் ரசிகர்களும் எனக்கு அன்பையும் ஆசிர்வாதங்களையும் அளித்திருக்கிறார்கள். மனைவி சீமாவுக்கு சிறந்த ஹீரோவாக எப்போதும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.