நாகசைதன்யா ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. இப்போது, ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கார்த்திகேயா 2’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தையும் பான் இந்தியா முறையில் வெளியிட உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in