துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு ட்ரீட்: ஜூன் 28-ல் ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் ரிலீஸ்

துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு ட்ரீட்: ஜூன் 28-ல் ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் ரிலீஸ்
Updated on
1 min read

துல்கர் சல்மான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சீதாராமம்’ படத்துக்குப் பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. அபிலாஷ் ஜோஷி இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in