‘ஸ்பை’ ரிலீஸ் எப்போது?

‘ஸ்பை’ ரிலீஸ் எப்போது?
Updated on
1 min read

ஹைதராபாத்: நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர் உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஸ்பை'. ஸ்ரீ சரண் பகாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். கேரி பி ஹெச் இயக்கியுள்ள இந்தப் படத்தை இடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.ராஜசேகர ரெட்டி தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் படம் இது. இந்நிலையில் இந்தப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாயின. அதை மறுத்துள்ள படக்குழு ஜூன் 29-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என தெளிவுப்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in