

மலையாளத்தில் வெளியான படம், ‘2018’. டோவினோ தாமஸ், நரேன், கலையரசன், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்த இந்தப் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழிலும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் கூறியதாவது:
2018-ல் பெரும் மழை காலத்துக்குப் பின், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த நேரத்தில், வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக, தன்னம்பிக்கை வீடியோ எடுக்க முடிவெடுத்தோம். அதற்காக, சேனல்கள், யூடியூப்பில் வந்த வீடியோக்களை பார்த்தபின், இந்த பேரிடர் தருணத்தில் பொதுமக்களும் அதிகாரிகளும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் உழைத்த ஓர் உண்மைக் கதை இருப்பது தெரிய வந்தது. அதை இந்த உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று படமாக எடுக்கும் முடிவுக்கு வந்தேன்.
இதில் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு முன்கூட்டியே மிகத்தெளிவாக திட்டமிட்டு மினியேச்சர் செய்து, ஸ்டோரி போர்ட் உருவாக்கி இருந்தோம். அது இதில் சரியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதனால் தான் இந்தப் படத்தில் எது நிஜமான காட்சி, எது கிராபிக்ஸ் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழிலும் படம் பண்ணும் ஆசை இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கும் ஆசை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அது நிறைவேறும் என நம்புகிறேன்” என்றார்.