மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படப்பிடிப்பு நிறைவு

மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ முதலான படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது.

பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மோகன்லால், மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடைபெறும் கதையில் நடிகர் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார்.

இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, ராஜஸ்தான் பகுதிகளில் 130 நாட்கள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in