அனல் பறக்கும் ஆக்‌ஷன் - பாலையாவின் ‘பகவந்த் கேசரி’ டீசர் எப்படி?

அனல் பறக்கும் ஆக்‌ஷன் - பாலையாவின் ‘பகவந்த் கேசரி’ டீசர் எப்படி?
Updated on
1 min read

அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகி வரும் படம் ‘பகவந்த் கேசரி’ இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? : பாலையா படங்களில் லாஜிக் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அனல் பறக்கும் ஆக்‌ஷன், புல்லரிக்க வைக்கும் பஞ்ச் வசனங்கள் இடம்பெறும். அந்த இலக்கணத்தின் படி இந்த படத்தின் டீசரும் பாலையாவின் குரலில் பஞ்ச் வசனத்துடன் தொடங்குகிறது. கையில் கோடாரி போன்ற ஒரு ஆயுதத்தை கையில் ஏந்தி நூற்றுக்கணக்கான அடியாட்களை துவம்சம் செய்கிறார் பாலையா. தமனின் இசையில் பின்னணியில் வரும் பாடல் கேட்டதும் ஈர்க்கிறது. இந்த ஆண்டு தசராவுக்கு பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் காத்திருக்கிறது என்பதை இந்த டீசர் உணர்த்துகிறது.

‘பகவந்த் கேசரி’ டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in