கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணம் 

கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணம் 
Updated on
1 min read

பெங்களூரு: கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

கன்னடத்தின் மூத்த நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனின் மகனாக ‘ஹலோ டாடி’ படத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் நிதின் கோபி. ‘முத்தினந்த ஹெந்தி’, ‘கேரளிடா கேசரி’, ‘நிஷப்தா’, ‘சிரபந்தவ்யா’ உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ருதி நாயுடு தயாரித்த 'புனர் விவாஹா' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நல்ல டிஆர்பி காரணமாக இவருக்கு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாய்ப்புகள் வரத்தொடங்கின. இந்நிலையில், திடீர் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிதின் கோபி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதின் கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in