நிகிலின் ‘சுயம்பு'வில் செங்கோல்

நிகிலின் ‘சுயம்பு'வில் செங்கோல்

Published on

ஹைதராபாத்: நடிகர் நிகிலின் 20-வது படத்துக்கு ‘சுயம்பு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில், இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை என்று தெரிவித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஆகஸ்ட்டில் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது.

படம்பற்றி பரத் கிருஷ்ணமாச்சாரி கூறும்போது, “இது சில வரலாற்று நாயகர்களைப் பற்றிய படம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையை கொண்டது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கற்பனை கதை. தற்போது பரபரப்பாகப் பேசப்படும் செங்கோல் இந்தப் படத்தில் முக்கியபங்கு வகிக்கிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in