

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நாயகனாக அறிமுகமாகும் படம், ‘எல்லம்மா’. இதை வேணு எல்தண்டி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் அனந்திகா சனில்குமார் நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர்.
இப்படத்துக்காக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, டைட்டில் பாடலை தேவி பிரசாத் பதிவு செய்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5-ல் வெளியாக இருக்கிறது.