ட்வீட்டாம்லேட்: ரோமியோ ஜூலியட் எஃபெக்ட்டில் மவுஸ் காதலர்கள்

ட்வீட்டாம்லேட்: ரோமியோ ஜூலியட் எஃபெக்ட்டில்  மவுஸ் காதலர்கள்
Updated on
2 min read

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வந்திருக்கும் 2-வது படம் ரோமியோ ஜூலியட். வழக்கமாக காதல் கதையாகத் தான் இருக்கும். ரோமியோ ஜூலியட் என்று டைட்டில் இருந்தாலும் படத்தில் இன்றைய காலகட்டதுக்கான காதல் அத்தியாங்கள் இடம்பெற்றிருக்கும் என்ற நினைப்பே படத்தை பார்க்க தூண்ட செய்திடும்.

ஆனால், படத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டவை உள்ளனவா என்பதே ஒவ்வொரு படத்துக்கு முன்னாள் நிற்கும் கேள்வி. அந்த வகையில், ரோமியோ ஜூலியட் வென்றதா? என்பதை ட்வீட்டாளர்களின் 'மவுஸ்' கிறுக்கல்களின் வழியாக தெரிந்து கொள்ளலாம். ட்வீட்டாம்லேட்டில் ரோமியோ ஜூலியட்டுக்கான வரவேற்பு மற்றும் புலம்பல் கருத்துக்கள். ஜெயிப்பது எது? பார்ப்போம்...

Noor Jahan ‏@jahan170288 - ஜெயம் ரவி நடித்ததில் இந்த படத்தை தான் நான் முதன்முதலில் தியேட்டருக்கு சென்று பார்த்தேன் என்பதை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நல்லப் படம். விஷுவல்/ ஹார்ட் ட்ரீட்.

StudentAlways ‏@96Madhavan - ‪#‎ரோமியோ_ஜூலியட்‬ அழகான கண்ணாடி டம்ளர செஞ்சி கீழ டொம்முனு போட்டு உடைச்சிட்டாங்க. ‪#‎Climaxla‬ சீன் கெடைக்கலனு ‪#‎RabDeBanaDeJodi‬ படத்தயும் ‪#‎மின்னலே‬ படத்தயும் துணைக்கு கூப்டுட்டாய்ங்கடா. ‪#‎கடைசில_சாவு_பயத்த_காட்டிட்டாங்க_பரமா.‬

Madhavan Viswam - ‪#‎ரோமியோ_ஜூலியட்_எஃபெக்ட்‬. படம் எப்படி: படம் நல்லா இருக்குதுனு சொல்ல முடியாது. நல்லா இல்லனும் சொல்ல முடியாது. மியூசிக் எப்படி: கேட்ட மாதிரியும் இருக்கு கேக்காத மாதிரியும் இருக்கு‪#‎போங்கடா_அங்கிட்டு‬.

ஏட்டு எகாம்பரம் ‏@shortvino - ரோமியோ ஜூலியட் படம் part -2 சுறா தான்.

மணி ‏@maniplayboy88 - ரோமியோ-ஜூலியட் உலக சினிமா அல்ல, உண்மை காதலர்கள் கொண்டாடும் ஓர் உன்னத சினிமா....

நிலாக்காதலன் ‏@MMSUNLOTUS - லாஜிக் இடிஇடின்னு இடித்தாலும், காதல் கனிந்தது காதல் வென்றது. #ரோமியோஜூலியட்.

ஜிம் பாடி ‏@vijayrun11 - ரோமியோ ஜூலியட் படம் சூப்பர். விஜய் அண்ணாவின் காதலுக்கு மரியாதை சீன் வந்ததும் எல்லாரும் விசில், கை தட்டல், காது கிழிஞ்சிடுச்சு.

நிலாக்காதலன் ‏@MMSUNLOTUS - படமாகத்தான் தொடங்கியது. காதலுக்கு பாடமாக இடைவேளை வந்துவிட்டது. #ரோமியோஜூலியட்.

Green Child ‏@_Hari_twits - காதலி உங்கள பணம் இல்லைனு கழட்டி விட்டுட்டாங்களா? அப்படினா, ரோமியோ ஜூலியட் படம் கண்டிப்பா பிடிக்கும். #RomioJuliet.

Manojkumar ‏@Manoj810180 - எங்கேயோ பார்த்த ஞாபகம் #ரோமியோ ஜூலியட்.

ஐயோக்யன் ‏@iyokkian420 - #ரோமியோ ஜூலியட் பேர கெடுத்துட்டானுக..

ramachandran ‏@melurraam - இயக்குனர் லக்ஷமன் ஒரு நல்ல காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு...

SELVA.... ‏@joe_selva1 - ரோமியோ ஜூலியட் படம் சுமார் பட் ஹன்சிகா நடிப்பு சூப்பர்....

ஜெயின்ஜெயபால் ‏@jainjayapal - வீடு சௌகார்பேட்ட, பத்துக்கு பத்து ரூம்தான். கல்யாணம் பண்ணிக்கிறியா??? #ரோமியோ ஜூலியட்.

ரோபுளு! ‏@its_Praba - ரோமியோ ஜூலியட் படத்துக்கு அனிரூத் வாய்ஸ் வச்சி நல்ல விளம்பரம் பன்னிட்டாங்க! (டண்டனக்கா).

S̊u̥r̵ęs̷h̷✵ ‏@Kolaveriboy - இன்னும் நூறு வருஷம் வாழ்ந்தாலும் உன்னோட வாழ்ந்த இந்த கொஞ்ச நாட்கள்தான் என் வாழ்க்கைல சந்தோஷமான நாட்கள் #RomeoJuliet.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in