‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போட்டியில் நிதின் - டித்தியா வெற்றி

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போட்டியில் நிதின் - டித்தியா வெற்றி
Updated on
1 min read

ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3’. இதில் நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிவந்தனர். நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி சரத்குமார் இருந்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இதன் இறுதிப்போட்டிக்கு தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா - காகனா, திலீப்- மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள் தேர்வாகினர். இதில், நிதின் - டித்தியா ஜோடி இந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். முதல் ‘ரன்னர் அப்’பாக தில்லை -ப்ரீத்தாவும் இரண்டாவது ‘ரன்னர் அப்’பாக பிரகனா- காகனாவும் வந்தனர். அவர்களுக்கு விஜய் ஆண்டனி பரிசுகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in