Click Bits: கேன்ஸ் விழாவில் தேசப்பற்றுடன் ஈர்த்த நடிகைகள்!

Click Bits: கேன்ஸ் விழாவில் தேசப்பற்றுடன் ஈர்த்த நடிகைகள்!
Updated on
2 min read

78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பனாரசி சேலையில் வந்திருந்த ஐஸ்வர்யா ராய், ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக நெற்றி குங்குமம் அணிந்து வந்ததற்காக அவர் பாராட்டை பெற்றுள்ளார்.

அதிதி ராவ் ஹைதாரி நீல நிற பார்டருடன் கூடிய சிவப்பு நிற புடவையில் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) அணிந்திருந்தார்.

நடிகை சோனம் சாப்ரா இந்தியா மீதான நான்கு தாக்குதல் தேதிகளை சித்தரிக்கும் வகையிலான கவுனை அணிந்திருந்தார். அதில் '2008 - மும்பை, 2016 - உரி, 2019 - புல்வாமா, மற்றும் 2025 - பஹல்கம்' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தது.

மேலும், நடிகை ருச்சி குஜ்ஜர், முழு ராஜஸ்தானி ரெஜாலியா அலங்காரத்தில், பாரம்பரிய குந்தன் நகைகளை அணிந்திருந்தார். அவர் அணிந்த நெக்லஸில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

முத்துக்கள் மற்றும் சிவப்பு எனாமல் தாமரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் உருவப்படம் அந்த நெக்லஸில் இடம்பெற்றிருந்தது.

கேன்ஸ் விழாவில் நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட இன்னபிற நடிகைகளும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in