Click Bits: ‘பிக்பாஸ்’ அமீர் - பாவ்னி திருமணம்!

Click Bits: ‘பிக்பாஸ்’ அமீர் - பாவ்னி திருமணம்!
Updated on
2 min read

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி

தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவ்னி.

தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன தம்பி’ தொடரின் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் 3 மாதங்களிலேயே பிரதீப் குமார் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.

இதன்பிறகு 2022ஆம் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதே போட்டியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற அமீர் உடன் பாவ்னிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in