

‘குடும்பஸ்தன்’ படம் மூலம் கவனம் பெற்ற நடிகை சான்வே மேகனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளன.
மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது.
சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பல மடங்கு லாபத்தை அள்ளியது ‘குடும்பஸ்தன்’.
‘குடும்பஸ்தன்’ படத்தின் நாயகியாக நடித்துள்ள சான்வே மேகனாவின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டினர்.
தெலுங்கில் ‘புஷ்பக விமானம்’, ‘பிரேம விமானம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ‘குடும்பஸ்தன்’ மூலம் அறிமுகமான சான்வே, முதல் படத்திலேயே கவனிக்க வைத்துள்ளார்.
விரைவில் அவர் நடித்துள்ள ‘டுக் டுக்’ என்ற தெலுங்குப் படம் மார்ச் 21-ல் வெளியாகிறது.
தற்போது, ‘குடும்பஸ்தன்’ ஓடிடியில் காணக் கிடைப்பதால், தமிழில் சான்வே ரசிகர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.
சான்வே போஸ்ட்டுகளுக்கும் பேஜுக்கும் லைக்ஸ், ஃபாலோயர் கூடி வரும் நிலையில், ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள அவ்வப்போது பகிர்வுகளையும் இட்டு வருகிறார் சான்வே.