

நடிகை மீனாட்சி சவுத்ரி விருது பெறும் விழாவையொட்டி, சமீபத்தில் மிடுக்கான தோற்றத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி.
‘லக்கி பாஸ்கர்’, ‘‘சங்கராந்தி வஸ்துன்னம்’ உள்ளிட்ட படங்களின் வெற்றி, மீனாட்சி சவுத்ரியை முன்னணி நடிகையாக வலம் வரச் செய்துள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’, விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜின் ‘மட்கா’ என பிஸியாகவே இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.
வாழ்க்கை ஒரு நீரோடை போல், அது செல்லும் பாதையில் பயணிப்பதாகச் சொல்லும் மீனாட்சு சவுத்ரி, ‘எனக்கு தெலுங்கு திரையுலகம்தான் தாய்வீடு போன்றது’ என்பார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ள மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய பகிர்வுகளை வசீகரித்துள்ளன.
குறிப்பாக, சாக்ஷி எக்ஸலன்ஸ் அவார்டு வென்ற கையோடு, அது குறித்த புகைப்படங்களுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சி பகிர்ந்துள்ளார்.