Click Bits: மின்னும் தாரகை ஆண்ட்ரியா!

Click Bits: மின்னும் தாரகை ஆண்ட்ரியா!
Updated on
2 min read

தமிழில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா

அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் அவரை தமிழின் முன்னணி நடிகையாக மாற்றியது.

மலையாளத்தில் வெளியான அன்னாயும் ரசூலும் படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார்.


தொடர்ந்து வடசென்னை, அவள், அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.


இன்னொருபுறம் பாடகியாக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in