

அருவியுடன் கூடிய வனப் பகுதியில் போட்டோ ஷூட் செய்து நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன்.
விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழில் அவருக்கான ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.
தமிழில் மாளவிகா மோகனன் நடித்து கடைசியாக வெளிவந்த பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2’ படத்தில் நடிக்கிறார் மாளவிகா மோகனன்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தின் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்.
“நான் இதுவரை நடிக்காத ஹாரர் காமெடி வகை படம்தான் ‘தி ராஜா சாப்’. இதில் எனது கதாபாத்திரத்துக்கு அருமையான காட்சிகளும் உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
“இயக்குநர் மாருதி இனிமையானவர். நான் ‘பாகுபலி’ படத்தின் மிகப் பெரிய ரசிகை. அதனால் பிரபாஸுடன் இணைந்து நடிக்கவும் விரும்பினேன். இந்த வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்” என்றார் மாளவிகா மோகனன்.