

ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை த்ரிஷா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தவர் த்ரிஷா.
1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார்.
பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும், 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் ஆனார்.
த்ரிஷா இரண்டாவதாக ஒப்புக்கொண்ட ‘மௌனம் பேசியதே’ அவரது முதல் படமாக வெளியாகி முந்திக்கொண்டது.
2000-ன் துவக்கத்தில் இருந்து இதோ இந்த 2025 வரை தமிழின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா.
மலையாள ரசிகர்கள் த்ரிஷாவை ‘ஜெஸ்ஸி’ என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கே அவர் பிரபலம்.
விஜய்யுடன் ‘லியோ’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’ என வரிசைகட்டிய த்ரிஷா, கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.