

நடிகை சாய் தன்ஷிகா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க முற்படும் திறமையாளர்களில் ஒருவர்தான் சாய் தன்ஷிகா.
2006-ல் ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
‘மறந்தேன் மெய் மறந்தேன்’, ‘திருடி’ போன்ற படங்களில் நடித்தவர், 2009-ல் வெளியான ‘கெம்ப்’ படத்தின் மூலம் கன்னட ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
2009-ல் வெளியான ‘பேராண்மை’ தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் ‘அரவான்’, ‘பரதேசி’ படங்கள் மூலம் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.
பா.ரஞ்சித் - ரஜினியின் ‘கபாலி’ படமும் சாய் தன்ஷிகாவுக்கு பரலவான கவனத்தை பெற்று தந்தது.
சாய் தன்ஷிகா நடிப்பில் வெளிவந்த ‘ஐந்தாம் வேதம்’ எனும் வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
சமீபத்தில் ‘தக்ஷினா’ எனும் தெலுங்கு படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் மூலம் முத்திரைப் பதித்தார் சாய் தன்ஷிகா.
அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வுகள் மூலம் லைக்ஸ் அள்ளுகிறார் சாய் தன்ஷிகா.
நடிகை சாய் தன்ஷிகா சமீபத்தில் க்ளாஸிக் லுக்கில் பகிர்ந்த புகைப்படங்களும் இப்போது கவனம் ஈர்த்துள்ளன.