

நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார்.
கடந்த 2013-ல் வெளியான திகில் ஜானர் படமான ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் பிரதான பாத்திரத்தில் நடித்தார். அதில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார்.
2015-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2016-ல் மட்டும் அவர் நடிப்பில் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ போன்ற படங்களில் ரிலீஸ் ஆகியிருந்தன.
2017-ல் விஜய் உடன் பைரவா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆனது.
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நாயகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடுத்துள்ளார். பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோருக்கு நாயகியாக நடித்துள்ளார்.
மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அந்தப் படம் நடிகை சாவித்ரியின் பயோபிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். அவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் அதிகம் பங்கேற்றனர்.
‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது.
தமிழில் ‘கண்ணிவெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பேஷன் டிசைனிங்கில் கீர்த்தி சுரேஷுக்கு ஆர்வம் அதிகம். அதில் பட்டம் முடித்துள்ளார்.