

நடிகை இந்துஜா ரவிச்சந்திரனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
மேயாத மான் படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் இந்துஜா. இப்படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.
தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்க்குரி படத்தில் நடித்தார்.
ஆர்யாவுடன் மகாமுனி படத்தில் இவரது கதாபாத்திரம் கவனிக்க வைத்தது.
விஜய்யின் பிகில் படத்தில் இவர் நடித்த கேரக்டர் பேசப்பட்டது.
கடைசியாக ஹரிஷ் கல்யாண் - எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன ‘பார்க்கிங்’ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார்.