

பாலிவுட்டில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் வாமிகா கேபி. ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த ‘ஜப் வி மெட்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த வாமிகா 2013ஆம் ஆண்டு வெளியான ‘சிக்ஸ்டீன்’ என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.
அப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் தோல்வி அடைந்தாலும் வாமிகாவின் நடிப்பு பேசப்பட்டது.
தமிழில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார்.
வாமிகாவின் திருப்புனை ப்ரைம் வீடியோவில் வெளியான ’ஜுபிளி’ வெப் தொடரில் இருந்து தொடங்கியது.
’மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ’நினைவோ ஒரு பறவை’ என்ற பகுதியில் நடித்து பாராட்டு பெற்றார்.