

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். குறிப்பாக பெண் மைய கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’ என 4 படங்கள் வெளியாகின.
2023-ல் வெளியான ‘பர்ஹானா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதே ஆண்டில் ஜோஜூ ஜார்ஜுடன் இணைந்து மலையாள படமான ‘புலிமடா’ படத்தில் நடித்தார்.
கடந்த ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டியர்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் உடன் அவர் இணைந்து நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ படம் ஜன.14 அன்று வெளியாகிறது