

நடிகை அபர்ணா பாலமுரளியின் விதவிதமான போஸ்களில் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்ரா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபர்ணா.
2016-ல் அவரது அடுத்த திரைப்படமான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது.
2017-ம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தில் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
2019-ல் வெளியான ‘சர்வம் தாள மையம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அபர்ணாவுக்கு பரவலான கவனத்தை பெற்று தந்தது.
அண்மையில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தில் நடித்திருந்தார் அபர்ணா.