கலைகளிலே அவள் ஓவியம்... நயன்தாரா ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!

கலைகளிலே அவள் ஓவியம்... நயன்தாரா ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
Updated on
2 min read

நயன்தாராவின் ஸ்டைலிஷான சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வயது வெறும் எண் தான் என்பதை அவரது தோற்றம் நிரூபிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் சர்ச்சைகளை எதிர்கொண்டது.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், அவரது வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் நவ.18-ல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் படங்கள் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது.

தொடர்ந்து மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடன்ட்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களை தவிர்த்து, ‘தனி ஒருவன் 2’, ‘மூக்குத்தி அம்மன் 2’ஆகிய பார்ட் 2 படங்களிலும் கவனம் செலுத்த உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in