செழித்த அழகில் சிவந்து நிற்கும்... தமன்னா க்ளிக்ஸ்! 

செழித்த அழகில் சிவந்து நிற்கும்... தமன்னா க்ளிக்ஸ்! 

Published on

நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் தாய் கதாபாத்திரத்தில் பார்த்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

அதற்கு முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டியிருந்தார்.

அவர் நடிப்பில் அண்மையில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

அடுத்த ஆண்டு தமன்னா நடிப்பில் ‘ஒடேலா 2’ திரைப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் சிவன் பக்தராக நடித்துள்ளார் தமன்னா.

தமிழில் அவர் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in