

தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதற்கு முன்பே தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். ’மெட்ராஸ் கஃபே’ தான் ராஷி கன்னாவுக்கு முதல் படம். தொடர்ந்து ’பெங்கால் டைகர்’, ‘ராஜா தி கிரேட்’, ‘தொலி பிரேமா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழிலும் ‘அயோக்யா’, ‘சங்கத் தமிழன்’, ‘அரண்மனை 3’, ‘சர்தார்’ என ஒரு ரவுண்டு வந்தார்.
கடைசியாக ‘அரண்மனை 4’ படத்தில் நடித்திருந்தார். அதில் கிளைமாக்ஸில் வந்த ‘அச்சோ அச்சச்சோ’ பாடலில் தமன்னாவுடன் ராஷி கன்னா ஆடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்தியில் வெளியான ‘ருத்ரா’ மற்றும் ‘ஃபார்ஸி’ வெப் தொடர்களில் நடித்தார். இதில் ஃபார்ஸி தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.