

சிவப்பு உடையில் நடிகை மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி.
அவர் நடிப்பில் அடுத்ததாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியையொட்டி அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ திரைப்படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார் மீனாட்சி சவுத்ரி.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ திரைப்படம் தான் மீனாட்சி சவுத்ரியின் முதல் தமிழ் திரைப்படம்.
இளம் நடிகையாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.