வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ... ஸ்ரேயா சரண் க்ளிக்ஸ்!

வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ... ஸ்ரேயா சரண் க்ளிக்ஸ்!
Updated on
2 min read

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன்பிறகு தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார்.

ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடிக்கு நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அப்படத்துக்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்தியிலும் சில படங்களில் நடித்தார்.

கடைசியாக ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கொஸ்சீவை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in