நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள்

நாக சைதன்யா - சோபிதா திருமண முன்வைபவ நிகழ்வு - வைரல் புகைப்படங்கள்
Updated on
2 min read

அண்மையில் நடிகர்கள் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணத்துக்கான சடங்குகள் தொடங்கியுள்ளன.

பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார்.

இவர்கள் இருவரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நாகசைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார்.

திருமண தேதி குறித்து அறிவிக்காத நிலையில், தற்போது திருமண சடங்குகள் தொடங்கியுள்ளதாக சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

இதையடுத்து, பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற உள்ளது.

சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in