

லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் ‘சென்னை டிரம் பெஸ்ட் 2024’ என்ற இசை விழா அக். 13-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 6 டிரம்மர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதுபற்றி லிடியன் கூறும்போது, “இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார். ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையை சேர்ந்த சித்தார்த் நாகராஜ் உட்பட திறமையுள்ள பலர் பங்கேற்கிறார்கள். இவ்விழாவில் 32 கிராமி விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த விழாவுக்கு பல்வேறு திரையுலகினரும் வருகின்றனர். இதற்கான டிக்கெட் புக் மை ஷோவில் கிடைக்கும். இந்த விழாவை முன்னிட்டு திரட்டப்படும் நிதி, பல்வேறு சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது”'என்றார்.
லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்கும் ‘பரோஸ்' படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.