ஜீ தமிழில் நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழில் நினைத்தேன் வந்தாய்
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், வரும் 22-ம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தனாபொட்வால் அவர் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கின்றனர். கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா நடிக்கின்றனர். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்தப் புதிய தொடரால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. ‘சீதா ராமன்’ தொடர், திங்கள் முதல் மாலை 6 மணிக்கும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியா ராகம்’, இரவு 9.30 மணிக்கும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடர், இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in