7 நகரங்களில் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்டம்

7 நகரங்களில் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்டம்
Updated on
1 min read

சென்னை: ஸ்டார் விஜய் டி.வி, தமிழ்நாட்டில் மக்களுடன் இணைந்து நவராத்திரி விழாவைக் கொண்டாடுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய 7 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், விஜய் டிவி ஸ்டார்ஸுடன் இணைந்து திருவிளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு, சூப்பர் சிங்கர்ஸின் பக்திப்பாடல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கவுள்ளன. செஃப் தாமுவின் தயாரிப்பில் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதமும் உண்டு.

இந்நிகழ்ச்சி காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு ஆகிய நகரங்களில் நடந்து முடிந்துவிட்டது. திருச்சியில் இன்று நடக்கிறது. திருநெல்வேலியில் வரும் 20ம் தேதியும் தஞ்சாவூரில் 21-ம் தேதியும் மதுரையில் 22ம் தேதியும் நடைபெறவுள்ளன. நவராத்திரி ஸ்பெஷலாக கொலு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் புகைப்படங்களை விஜய் டிவிக்கு (@vijaytelevision) #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தால், வெற்றி பெறும் முதல் 3 போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in