

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நாளை (7-ம் தேதி) முதல் ‘கிழக்கு வாசல்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், அஸ்வினி, ஆனந்த்பாபு, தினேஷ் கோபாலசாமி, அருண் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இது சாமியப்பன் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. சாமியப்பனின் வளர்ப்பு மகள் ரேணுகா. அப்பா, அம்மா, 2 சகோதரர்கள் என பெரிய குடும்பம். அதை அன்பாக வைத்திருக்கும் ரேணுகா, தனது சொந்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், தான் வழக்கறிஞராக ஆசைப்படுகிறாள் . அவளுக்குத் துணையாக நிற்கிறார் தந்தை சாமியப்பன்.
அர்ஜுன் மற்றும் சண்முகம் 2 சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், அவளிடம் அன்பையும் பாசத்தையும் கொண்டுள்ளனர். இந்தக் குடும்பத்துக்கு வரும் பிரச்சினையை ரேணுகா எப்படி சமாளித்து நிற்கிறாள் என்பது கதை. நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 10 மணிக்கு இந்த தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது