ஸ்டார் விஜய் டிவியில் ‘கதாநாயகி’

ஸ்டார் விஜய் டிவியில் ‘கதாநாயகி’
Updated on
1 min read

சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான பலர், திரைத்துறையிலும் முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா, புகழ் என பலர் திரையுலகில் தங்களை நிலைநிறுத்தி உள்ளனர்.

இந்த வரிசையில், தகுதியான கதாநாயகியை அறிமுகப்படுத்தும் வகையில், ‘கதாநாயகி’ என்ற ரியாலிட்டி ஷோவை ஸ்டார் விஜய் நடத்துகிறது. வரும் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பான தேர்வு நடைபெற்றது. நடிப்புத் தொழிலில் அடியெடுத்து வைக்க விரும்பும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ராதிகா சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக் குமார் பங்கேற்கின்றனர். இதில் பல திறமையான தமிழ்ப் பேசும் ‘ஹீரோயின்கள்’ உள்ளனர். நிகழ்ச்சியை ‘கலக்கப்போவது யார்’குரேஷி மற்றும் பாலா தொகுத்து வழங்குகிறார்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in