

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த விவாத நிகழ்ச்சி, ‘தமிழா தமிழா’. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த, இயக்குநர் கரு. பழனியப்பன், சமீபத்தில் இதில் இருந்து விலகினார்.
இந்நிலையில் புதிய தொகுப்பாளருடன் இந்நிகழ்ச்சி ஜூலை 16-ம் தேதி முதல் ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் என்பவர் தொகுத்து வழங்க உள்ளார். இவர், பல்வேறு தலைப்புகளில் பல விஷயங்களை வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து விவாத மேடையில் அலச உள்ளார் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.