ஆஸ்​கர் விருது விழா 2029 முதல் யூடியூபில் நேரலை!

ஆஸ்​கர் விருது விழா 2029 முதல் யூடியூபில் நேரலை!
Updated on
1 min read

லாஸ் ஏஞ்​சல்ஸ்: கடந்த 1929ம் ஆண்​டில் ஆஸ்​கர் விருது தோற்றுவிக்​கப்​பட்​டது. கடந்த 1953ம் ஆண்​டில் அமெரிக்​கா​வின் என்​பிசி தொலைக்​காட்சி முதல்​முறை​யாக ஆஸ்​கர் விருது விழாவை ஒளிபரப்பு செய்​தது.

இதன்​பிறகு கடந்த 1976-ம் ஆண்டு முதல் அமெரிக்​காவை சேர்ந்த ஏபிசி தொலைக்​காட்சி ஆண்​டு​தோறும் ஆஸ்​கர் விருது விழாவை நேரலை​யாக ஒளிபரப்பு செய்து வரு​கிறது. வரும் 2026, 2027, 2028ம் ஆண்​டு​களிலும் ஏபிசி தொலைக்​காட்​சி​யில் ஆஸ்​கர் விருது விழா ஒளிபரப்பு செய்​யப்பட உள்​ளது.

வரும் 2028-ம் ஆண்டு ஆஸ்​கரின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்​ளது. இதன்​பிறகு வரும் 2029-ம் ஆண்டு முதல் யூ டியூபில் ஆஸ்​கர் விருது விழா நேரலை​யாக ஒளிபரப்பு செய்​யப்பட உள்​ளது. இதுதொடர்​பாக ஆஸ்​கர்

அகாட​மி, யூடியூப் நிர்​வாகத்​துக்கு இடையே ஒப்​பந்​தம் கையெழுத்தாகி உள்​ளது. இதன்​படி வரும் 2033-ம் ஆண்டு வரை ஆஸ்​கர் விருது விழா​வின் ஒளிபரப்பு உரிமையை யூடியூப் பெற்றிருக்​கிறது.

இது குறித்து யூ டியூப் தலைமை செயல் அதி​காரி நீல் மோகன் கூறும்​போது, “ஆஸ்​கர் அகாட​மி​யுடன் யூடியூப் கைகோத்து உள்ளது. இதன்​மூலம் உலகம் முழு​வதும் திரைப்பட ரசிகர்​களுக்​கு புதிய அனுபவம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

ஆஸ்​கர் விருது விழா 2029 முதல் யூடியூபில் நேரலை!
ஸ்னிக்கோ மீட்டர் தடை செய்யப்பட வேண்டும் - ஆஸி., இங்கிலாந்து காட்டம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in