அமெரிக்க முன்​னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ்!

அமெரிக்க முன்​னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ்!
Updated on
1 min read

ஆஸ்​கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். பிலடெல்​பி​யா, பாரஸ்ட் கம்ப், கேட்ச்மி இஃப் யு கேன், த டெர்​மினல், த பசிபிக் உள்பட பல படங்​களில் நடித்துள்​ளார்.

இவர் இப்​போது அமெரிக்க முன்​னாள் அதிபர் ஆபிர​காம் லிங்​க​னாக நடிக்க இருக்​கிறார். ஜார்ஜ் சாண்​டர்ஸ் எழு​தி, 2017-ம் ஆண்டு வெளி​யாகி புக்​கர் பரிசை வென்ற ‘லிங்கன் இன் த பார்​டோ’ என்ற நாவலின் அடிப்​படை​யில் உருவாகும் படம் இது.

அமெரிக்க உள்​நாட்​டுப் போர் நடந்து கொண்​டிருந்த 1862-ம் ஆண்டு காலத்​தில், அதிபர் ஆபிர​காம் பங்​க​னின் 11 வயது மகன் வில்லி உயி​ரிழந்​தார். அதைத் தாங்க முடி​யாத ஆபிர​காம் லிங்​கன் ரகசி​ய​மாகத் தனது மகனின் கல்லறைக்​குச் சென்​று, அவனது உடலைக் கட்​டிப்​பிடித்து அழு​தார் என்று சில தகவல்​கள் இருக்​கின்​றன.

இந்​தச் சம்​பவத்தை அடிப்​படை​யாக வைத்து இந்த நாவல் எழுதப்​பட்​டுள்​ளது. இந்​தக் கதை​யின் பின்​னணி​யில் உருவாகும் இப்படத்தை இயக்கி தயாரித்​து, ஆபிர​காம் லிங்​க​னாக நடிக்​கிறார் டாம் ஹாங்க்​ஸ்.

அமெரிக்க முன்​னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ்!
‘நல்லகண்ணு... பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்!’ - தலைவர்கள் புகழஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in