இணை​யத்​தில் கசிந்​தது ‘தி ஒடிஸி’ - சட்ட நடவடிக்​கை​யில் தயாரிப்பு நிறு​வனம்

இணை​யத்​தில் கசிந்​தது ‘தி ஒடிஸி’ - சட்ட நடவடிக்​கை​யில் தயாரிப்பு நிறு​வனம்
Updated on
1 min read

கிறிஸ்​டோபர் நோலன் இயக்​கத்​தில் வெளி​யாகி வசூல் சாதனை படைத்து வரும் படம், ‘தி ஒடிஸ்​ஸி’.

ஹோமரின் புகழ்​பெற்ற கிரேக்​கக் காவிய​மான ‘தி ஒடிஸி’யை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்​வே, ஜெண்​டயா ஆகியோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

உலக அளவில் சுமார் ரூ.5,000 கோடிக்​கும் மேல் வசூலித்​துள்ள இந்தப் ​படம், சமூக வலை​தளங்​களி​லும், சட்​ட​விரோத இணையதளங்​களி​லும் கசிந்​தது. லட்​சக்​கணக்​கானோர் கசிந்த பதிப்பைப் பார்த்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்த விவ​காரம் குறித்து யுனிவர்​சல் பிக்​சர்ஸ் வெளி​யிட்ட அறிக்கை​யில்​, “ ‘தி ஒடிஸி’ திரைப்​படம் அனு​ம​தி​யின்றி இணையத்தில் பதிவேற்​றப்​பட்​டதை அறிந்​ததும் அதை நீக்​கும் நடவடிக்​கைகளைத் தொடங்​கினோம்.

பதிப்​புரிமை மீறலை மிகவும் தீவிர​மாகக் கருதுகிறோம். எங்​கள் உள்​ளடக்​கம் மற்​றும் அறி​வு​சார் சொத்​துரிமை​யைப் பாது​காக்​கத் தேவை​யான அனைத்​து சட்​ட நடவடிக்​கைகளை​யும்​ மேற்​கொள்​வோம்​” என்​று தெரிவித்​துள்​ளது.

இணை​யத்​தில் கசிந்​தது ‘தி ஒடிஸி’ - சட்ட நடவடிக்​கை​யில் தயாரிப்பு நிறு​வனம்
சென்​னை​யில் ஜப்​பானிய திரைப்பட விழா
இணை​யத்​தில் கசிந்​தது ‘தி ஒடிஸி’ - சட்ட நடவடிக்​கை​யில் தயாரிப்பு நிறு​வனம்
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in