‘த மாஸ்க்’ பட வில்லன் பீட்டர் கிரீன் மர்ம மரணம்

‘த மாஸ்க்’ பட வில்லன் பீட்டர் கிரீன் மர்ம மரணம்

Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன் (60), நியூயார்க்கில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் வெளியான ‘த மாஸ்க்’, ‘பல்ப் ஃபிக்சன்’, ‘ஜட்ஜ்மென்ட் நைட்’ ‘ட்ரெய்னிங் டே’, ‘த கான்டினென்டல்’, ‘எண்ட் கேம்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பீட்டர் கிரீன். ‘த மாஸ்க்’ படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பீட்டர் கிரீன், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தலை கவிழ்ந்த நிலையில் இருந்ததாகவும் முகத்தில் ரத்தக்கறைகளும், காயங்கள் இருந்ததாகவும் அவர் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உடலின் அருகே கடிதம் ஒன்றை போலீஸார் எடுத்துள்ளனர். அவர் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். பீட்டர் கிரீன் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘த மாஸ்க்’ பட வில்லன் பீட்டர் கிரீன் மர்ம மரணம்
க்யூட் புன்னகையுடன் கீர்த்தி ஷெட்டி க்ளிக்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in