‘த லாஸ்ட் எம்​பரர்’ நடிகர் கேரி ஹிரோ​யுகி தகவா காலமானார்

‘த லாஸ்ட் எம்​பரர்’ நடிகர் கேரி ஹிரோ​யுகி தகவா காலமானார்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஹிரோ​யுகி தகவா (75) காலமானார். ஜப்​பானில் பிறந்த கேரி ஹிரோ​யுகி தகவா, பல ஹாலிவுட் திரைப்​படங்​கள் மற்​றும் சின்​னத்​திரை தொடர்​களில் நடித்துள்ளார்.

தான் நடித்த ஹாலிவுட் படங்​களில் பெரும்​பாலும் வில்​லன் வேடங்​களில் நடித்​திருக்​கிறார். ‘த லாஸ்ட் எம்​பரர்’, ஜேம்​ஸ்​ பாண்ட் திரைப்​பட​மான ‘லைசன்ஸ் டு கில்’, ‘அமெரிக்​கன் மி’, ‘ரைசிங் சன்’, ‘மார்​டல் கொம்​பட்’, ‘பேர்ல் ஹார்​பர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வில் உள்ள கலி​போர்​னி​யா​வில் வசித்து வந்த அவர், பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காகச் சிகிச்சை பெற்று வந்​த நிலை​யில் டிச.4-ம் தேதி கால​மா​னார். இதை அவருடைய மானேஜர் உறுதிப்​படுத்​தி​யுள்​ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

‘த லாஸ்ட் எம்​பரர்’ நடிகர் கேரி ஹிரோ​யுகி தகவா காலமானார்
The Great Dictator – சர்வாதிகாரியை எதிர்த்த சாப்ளின் | சினிமாவும் அரசியலும் 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in