ஆஸ்கர் 2026 ஹைலைட்ஸ்: சிறந்த படம் உட்பட 6 விருதுகளை அள்ளிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’!

4 விருதுகளை வென்ற ‘சின்னர்ஸ்’!
ஆஸ்கர் விருதுடன் இயக்குநர்கள் ரியான் கூக்லர் மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன்

ஆஸ்கர் விருதுடன் இயக்குநர்கள் ரியான் கூக்லர் மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன்

Updated on
2 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் 98-வது ஆஸ்கர் விருது விழா கோலாகல​மாக இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​ கலைஞர்கள் இந்த விருது அறி​விப்​பை​யும் விழாவை​யும் ஆவலுடன் எதிர்​நோக்கி இருந்தனர். இந்த விழாவில் ஆஸ்கர் விருதை வென்றவர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் ரியான் கூக்​லர் இயக்​கிய ஹாலிவுட் படமான ‘சின்​னர்​ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்​துரைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்​றில் அதிக பரிந்​துரைகளைப் பெற்​ற​தாக இப்​படம் மாறி​யுள்​ளது. இதற்கு முன்பு ஆஸ்கர் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு படம் 14 பிரிவு பரிந்துரைகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்​டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்​’ (2016) ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

98-வது ஆஸ்கர் விருது வெற்றியாளர்கள் யார் யார்?

> சிறந்த படம் - ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)

> சிறந்த நடிகர் - மைக்கேல் பி ஜோர்டான் - படம்: சின்னர்ஸ்

> சிறந்த துணை நடிகர் - ஷான் பென் - படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

> சிறந்த நடிகை - ஜெஸ்ஸி பக்லி - படம்: ஹேம்நெட்

> சிறந்த துணை நடிகை - ஏமி மடிகன் - படம்: வெப்பன்ஸ்

> சிறந்த இயக்குநர் - பால் தாமஸ் ஆண்டர்சன் - படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

> சிறந்த அனிமேஷன் படம் - கே.பாப் டிமன் ஹன்டர்ஸ்

> சிறந்த அனிமேஷன் குறும்படம் - The Girl Who Cried Pearsl

> சிறந்த கேஸ்ட்டிங் - காசண்ட்ரா குலுகுண்டிஸ் - படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

> சிறந்த ஒளிப்பதிவு - ஆட்டம் டுரால்ட் ஆர்காபா - படம்: சின்னர்ஸ்

> சிறந்த ஆடை வடிவமைப்பு - கேட் ஹாவ்லி - படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

> சிறந்த ஆவணப்படம் - Mr. Nobody Against Putin

> சிறந்த ஆவண குறும்படம் - All The Empty Rooms

> சிறந்த படத்தொகுப்பு - ஆண்டி ஜர்கென்சென் - படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

> சிறந்த சர்வதேச திரைப்படம் - சென்டிமென்டல் வேல்யூ

> சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி சிங்கர்ஸ், Two People Exchanging Saliva

> சிறந்த ஒப்பனை - மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல், கிளியோனா - படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

> சிறந்த இசை: பேக்கிரவுண்ட் ஸ்கோர் - லூத்விக் கோரன்சன் - படம்: சின்னர்ஸ்

>சிறந்த இசை: ஒரிஜினல் பாடல் = கோல்டன் - கே.பாப் டிமான் ஹன்டர்ஸ்

> சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் - படம்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்

> சிறந்த திரைக்கதை - ரியான் கூக்லர் - படம்: சின்னர்ஸ்

> Adapted திரைக்கதை - பால் தாமஸ் ஆண்டர்சன் - படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

<div class="paragraphs"><p>ஆஸ்கர் விருதுடன் இயக்குநர்கள் ரியான் கூக்லர் மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன் </p></div>
Mindiyum Paranjum: லீனா அருளும் காதல் தரிசனம் | திரை தேவதைகள் 09

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in